சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் ஆனைகட்டியில் இன்று விழிப்புணர்வு முகாம்
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் ஆனைகட்டி பகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 29) இலவச சட்ட உதவி, விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் ஆனைகட்டி பகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 29) இலவச சட்ட உதவி, விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
ஆனைகட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த முகாமை உயர்நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல் தலைவருமான குலுவாடி ஜி.ரமேஷ் தொடங்கி வைக்கிறார்.
இந்த முகாமை, சமூக நலத் துறை, வருவாய், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறை, சுகாதாரம், தொழிலாளர், காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள், அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு நடத்துகிறது.
மேலும் இந்த முகாமில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாமும் நடைபெற இருப்பதால் சுற்றுப் பகுதி மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.