முகப்பு
கோயம்புத்தூர்

ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு வனப் பகுதியில் தடை

பொள்ளாச்சி அருகே நடைபெறவுள்ள ஹெலிகாப்டர் திருவிழாவில் பங்கேற்கும் ஹெலிகாப்டர் வனப் பகுதியில் பறக்க வனத் துறை தடை விதித்துள்ளது.

Updated On : 29 மார்ச், 2018 at 8:34 AM
பகிர்:

பொள்ளாச்சி அருகே நடைபெறவுள்ள ஹெலிகாப்டர் திருவிழாவில் பங்கேற்கும் ஹெலிகாப்டர் வனப் பகுதியில் பறக்க வனத் துறை தடை விதித்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த நா.மூ.சுங்கம் பகுதியில் ஹெலிகாப்டர் திருவிழா நடத்த ஜஸ்பிளை ஏவியேஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துவருகிறது. 
  புதன்கிழமை துவங்க இருந்த இந்த விழா திடீரென வனப் பகுதியில் பறக்க வனத் துறை தடை விதித்ததால் 2  நாள்கள் கழித்து துவங்கும் என ஜஸ்பிளை ஏவியேஷன் நிர்வாகிகளால் கூறப்படுகிறது. 
வால்பாறை வனச் சரக அலுவலர் சக்திவேல் வனப் பகுதிக்குள் ஹெலிகாப்டர் பறக்ககூடாது என தடை விதித்து ஜஸ்பிளை ஏவியேஷன்ஸ் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  இதனால், ஹெலிகாப்டர் திருவிழா 29 அல்லது 30-ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.