என்.ஜி.பி. கல்லூரியில் கலாம் விருது வழங்கும் விழா
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சிக் கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை மலைவாழ் இன மக்களுக்கான டாக்டர் கலாம் கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து தேசிய அளவிலான விருது வழங்கும் விழா
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சிக் கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை மலைவாழ் இன மக்களுக்கான டாக்டர் கலாம் கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து தேசிய அளவிலான விருது வழங்கும் விழா என்.ஜி.பி. கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் 125 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவர் சுப்பிரமணியத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சிக் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பேசியதாவது:
கலாம் விருது என்பது மாணவர்களையும், ஆசிரியர்களையும் கல்வி நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. சமூகத்தில் மாணவர்கள் மத்தியில் ஒரு தூண்டுதல் பொறியாக ஆசிரியர் மட்டுமே இருக்க முடியும். கலாமின் எளிமையும், ஒழுங்குமுறையான வாழ்வும் நமது நாட்டுக்கே அவரைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு காரணம். உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, கலாம் அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் எஸ்.கிருஷ்ணகுமார், மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் பி.ஆர்.வாசுதேவ ராவ், தமிழ்நாடு அரசு பொதுநலத் துறையின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் பி.குப்புசாமி, தென்னக ரயில்வே துணை ஆணையர் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கல்லூரி முதல்வர் டாக்டர் வி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.