பிஏபி திட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
பிஏபி திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் திங்கள்கிழமை (காலை 8 மணி) நீர்மட்ட நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் விவரம்: சோலையாறு அணையின் மொத்த உயரமான 160 அடியில், 1
பிஏபி திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் திங்கள்கிழமை (காலை 8 மணி) நீர்மட்ட நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: சோலையாறு அணையின் மொத்த உயரமான 160 அடியில், 18 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 161 கன அடி. தண்ணீர் வெளியேற்றம் இல்லை.
பரம்பிக்குளம் அணையின் மொத்த உயரமான 72 அடியில், 5.92 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 320 கன அடியும், வெளியேற்றம் 120 கன அடியும் உள்ளது.
ஆழியாறு அணையின் மொத்த உயரமான 120 அடியில், 58.20 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 187 கன அடியும், வெளியேற்றம் 85 கன அடியும் உள்ளது.
திருமூர்த்தி அணையின் மொத்த உயரமான 60 அடியில், 11 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.
நீர்வரத்து 8 கன அடி. வெளியேற்றம் 25 கன அடியும் உள்ளது.
அமராவதி அணையின் மொத்த உயரமான 90 அடியில், 36.26 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 164 கன அடியும், வெளியேற்றம் 7 கன அடியும் உள்ளது.