கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வருமா சிறுநீரக சுத்திகரிப்பு மையம்?

DIN


மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30-க்கு மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ள போதிய வசதி இல்லாமல்இருந்தது.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் இருமுறை சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
இப்பரிசோதனை செய்ய ஒரு முறைக்கு ரூ.1500 முதல் ரூ.3000 வரை செலவாகும். எனவே, மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் (டயாலிசிஸ்)அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தனி அறை ஒதுக்கப்பட்டு ரூ. 20 லட்சம் மதிப்பில் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 15 நாள்கள் மருத்துவர்கள், உதவியாளர்கள் பயிற்சி பெற்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே மையம் முழுமையாக தயாராகி விட்டது. ஆனால் இன்னும் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT