கோயம்புத்தூர்

20 மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

DIN

கோவையில் 20 மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்துகளை தொடக்கிவைத்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ரூ. 126.80 கோடி மதிப்பில் 471 புதிய பேருந்துகளின் இயக்கத்தை சென்னையில் அண்மையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைத்தார். அதில், கோவை கோட்டத்துக்கு 43 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், கோவை மண்டலத்துக்கு 10 பேருந்துகள்,  திருப்பூர் மண்டலத்துக்கு 28, ஈரோடு மண்டலத்துக்கு 5 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 
கோவை மண்டலத்துக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பேருந்துகள், ராமேசுவரம், திருச்சி, திருவண்ணாமலை, சிவகாசி, திருநெல்வேலி, கும்பகோணம், குமுளி ஆகிய வழித் தடங்களில் இயக்கப்படும்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், சென்னையில் மின்சாரத்தால் இயங்கும் 80 பேருந்துகளும், கோவையில் 20 மின்சாரப்  பேருந்துகளும் விரைவில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் காந்திபுரம், உக்கடம் மேம்பாலங்கள், பொள்ளாச்சி முதல் ஆத்துப்பாலம், மேட்டுப்பாளையம் முதல் கோவை வரையில் சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் பெருநகரங்களுக்கு 20 ஆயிரத்து 497 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை ஏ.சண்முகம், சு.குணசேகரன், உ.தனியரசு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பால்ராஜ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் முத்துகிருஷ்ணன், பொது மேலாளர்கள் கோவிந்தராஜ், வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT