முகப்பு
கோயம்புத்தூர்

கண் தான விழிப்புணர்வுப் பேரணி

கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவைக் கிளை ஆகியன சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:33 AM
பகிர்:

கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவைக் கிளை ஆகியன சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண் தான விழிப்புணர்வு வாரம்  அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
இதன்படி  கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண் தான விழிப்புணர்வுப் பேரணியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் கொடியசைத்து துவக்கிவைத்தார். இப்பேரணியில் கோவை கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர் மற்றும் கண் வங்கி பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
மேலும் பார்வையற்ற ஒரு நாயும்,  கால்களை இழந்த ஒரு நாயும் பேரணியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.