சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவை, வீரகேரளம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் எஸ்.மணிகண்டன் (26), இவர், கோவை விமான நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொண்டுவரும் ஒப்பந்ததாரரிடம் பணியாற்றி வந்தார். இவர், தனது வீட்டின் அருகேயுள்ள 4 வயது சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் மணிகண்டனைக் கைது செய்த போலீஸார் அவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே மணிகண்டனை ஞாயிற்றுக்கிழமை பெண் வீட்டார் பார்க்க வருவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தற்போது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.