நின்றிருந்த லாரி மீது மோதி கல்லூரி மாணவர் சாவு
சூலூர் அருகே நின்றிருந்த லாரி மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சூலூர் அருகே நின்றிருந்த லாரி மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கேரள மாநிலம், காசர்கோடைச் சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் விஷ்ணு(23). இவர், சூலூரில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில், விஷ்ணு, தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். சூலூர் பிரிவு அருகே வரும்போது, அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடை விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.