லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
சூலூர் அருகே லாரியில் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
சூலூர் அருகே லாரியில் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கே.என் பாளையத்தைச் சேர்ந்த அனுமந்தன் மகன் ராமசாமி (57). இவர் சூலூர் அருகே பட்டணம்புதூரில் உள்ள நூற்பாலையில் லாரியில் பாரம் ஏற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.