கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

DIN

பொள்ளாச்சியில் 200 கர்ப்பிணிகளுக்கு அரசு சார்கில் சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 120 கர்ப்பிணிகளுக்கு பொள்ளாச்சி நேரு மண்டபத்திலும், கிணத்துக்கடவில் 80 கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சி  நேரு திருமணமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கையில் வளையல் அணிவித்து சம்பிரதாய நலங்கு வைத்து வளைகாப்பு செய்தனர். விழாவில் சட்டப் பேரவைதுணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு தேவையான சீர் பொருள்களையும், கர்ப்பகால பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ச்சி குறித்த கையேடுகளையும் வழங்கினார். முன்னாள் நகர்மன்றத்தலைவர் கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் விஜயகுமார், மாநில கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், ஒன்றியச் செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நிகழ்ச்சியில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேககையில், இந்தியாவிலேயே ஏழைப் பெண்களுக்கு இலவச சீர்வரிசைகளுடன் வளைகாப்பு நடத்தியது மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். தற்போது அவரது வழியில் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.
விழாவில், மாவட்ட திட்டஅலுவலர் பத்மாவதி, மருத்துவ அலுவலர்பூங்கொடி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மீனாகுமாரி, வட்டார வளர்ச்சிஅலுவலர்கள், குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் உள்பட பலர்பங்கேற்றனர்.

வால்பாறையில்...
வால்பாறையில் நடைபெற்ற விழாவில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
மாவட்ட சமூக நலத் துறையின் வால்பாறை வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் வளைகாப்பு  விழா வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர கூட்டுறவு வங்கிதத் தலைவர் வால்பாறை அமீது, துணைத் தலைவர் மயில்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழுந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் சாந்தி வரவேற்றார். விழாவுக்கு தலைமையேற்ற வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரா வாசு 40 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி வளைகாப்பு நிகழச்சியை நடத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT