கோயம்புத்தூர்

வெள்ளக்கிணறு குளத்தில் 293 விநாயகர் சிலைகள் கரைப்பு

DIN

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு குளத்தில் கரைக்கப்பட்டன.
துடியலூர் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பாஜக செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து விசர்ஜன ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கொண்டு வரப்பட்டிருந்த 293 சிலைகள் குளத்தில் கரைக்கப்பட்டன.
இதேபோல் சூலூர், கருமத்தம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் 33 விநாயகர் சிலைகள், வி.ஹெச்.பி. சார்பில் 20 சிலைகள், பொதுமக்கள் சார்பில் 14 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT