கோயம்புத்தூர்

வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக பெண் உள்பட திமுகவினர் 4 பேர் கைது

DIN

கோவையில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக பெண் உள்பட திமுகவினர் நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூர் பகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் அளிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செல்வபுரம் போலீஸாரிடம் 76ஆவது வார்டு அதிமுக இணைச் செயலர் பெருமாள் புகார் தெரிவித்தார். 
அதில், திமுகவைச் சேர்ந்த சாந்தலிங்கம் (72), கார்த்திக் (25), குமார் (47) ஆகியோர் திமுகவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அதைத் தட்டிக் கேட்ட என்னை 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டினர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பேரில் சாந்தலிங்கம், கார்த்திக், குமார் ஆகியோர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை செல்வபுரம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17,900 கைப்பற்றப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் தொண்டாமுத்தூர் வடக்குத் தெருவில் திமுகவைச் சேர்ந்த வனிதா (42) என்பவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாயின. 
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற நிர்வாகி கிருஷ்ணன், போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், வனிதாவைக் கைது செய்து, அவரிடம் இருந்த துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ரூ.3 400-ஐ பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT