கோயம்புத்தூர்

தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

DIN

பொள்ளாச்சி வனச் சரகம் அருகே ஆண்டியூரில்  ஐந்து தென்னை மரங்களை காட்டு யானை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.
 பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டி அமைந்துள்ளது ஆண்டியூர் பகுதி. இங்கு நடராஜ் என்பவரின் விவசாயத் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை சனிக்கிழமை இரவு புகுந்தது.
 அந்த யானை தோட்டத்தில் இருந்த ஐந்து தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றது. தகவலறிந்த வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். 
பின்னர் 12 பேர் கொண்ட குழு அமைத்து காட்டு யானை விவசாயப் பகுதிக்குள் வராமல் இருக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT