கோயம்புத்தூர்

மழை வேண்டிகழுதைகளுக்கு திருமணம்

DIN

அன்னூர் அருகே லக்கேபாளையத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைத்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி, லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததால் கழுதைகளுக்கு திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை இரு கழுதைகளுக்கு அலங்காரம் செய்து, மேள தாளம் முழங்க திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி ஏற்பட்ட போது, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்ததையடுத்து மழை பெய்தது. எனவே, அந்த ஐதீகத்தில் இதனை நடத்தியுள்ளோம் என்றனர்.
 இதேபோல் அன்னூர் அருகே உள்ள பட்டக்காரன்புதூரில் மழை வேண்டி தவளைகளுக்கு கடந்த ஜூலை 13-ஆம் தேதி திருமணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT