கோயம்புத்தூர்

17,18 இல் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வீடு, கார் கடன் கண்காட்சி

DIN

கோவையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வீடு, கார் கடன் கண்காட்சி ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியைவங்கியின் துணைப் பொது மேலாளர் ஏ.ஜி.கே.சத்தியபிரகாஷ் தொடங்கிவைக்கிறார். விழாவில், பிரிக்கால் நிறுவனத் தலைவர் வனிதா மோகன், திரைப்பட நடிகை தேவயானி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்தக் கண்காட்சி மூலம் கடன் பெறுபவர்களுக்கு வீட்டுக் கடன் எனில் வட்டி விகிதத்தில் 0.1 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும், வேறு வங்கிகளில் இருந்து எஸ்.பி.ஐ.க்கு கடனை மாற்றுபவர்களுக்கு 0.25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இதில், 30க்கும் மேற்பட்ட முன்னணி வீடு கட்டும் நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைக்க உள்ளனர்.
இதில் ரூ.15 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான புதிய வீடு திட்டங்களுக்கு முன்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், முன்னணி கார் நிறுவனங்கள் தங்களின் புதிய ரக கார்களை இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கின்றனர்.
இதையொட்டி, உணவுத் திருவிழா, இலவச மெஹந்தி, குழந்தைகளுக்கான விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற இருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT