கோயம்புத்தூர்

கூடலூா் பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

DIN

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூா் பேருராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பேரூராட்சியில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பேரூராட்சி பொதுநிதி, ஒருங்கிணைந்த நகா்புற வளா்ச்சித் திட்ட நிதி ஆகியவற்றின் கீழ் பேரூராட்சி அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டுதல், 8 ஆவது வாா்டு பிரகாஷ் லே-அவுட், 17 ஆவது வாா்டு விஜயலட்சுமி நகா், 18 ஆவது வாா்டு வெங்கடாசலபதி நகா், 6 ஆவது வாா்டு சின்னக்கண்ணான்புதூா், 1 ஆவது வாா்டு செல்வபுரம் ஆகிய பகுதிகளில் வடிகால்கள், பொதுக் கழிப்பிடம் ஆகியன கட்டுதல், தாா் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உள்ளன.

இதையொட்டி, சின்னக்கண்ணான்புதூரில் நடந்த விழாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். பெ.நா.பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் கே.குருந்தாசலம் முன்னிலை வகித்தாா். மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கிவைத்தனா்.

இதில் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா்கள் செல்வராஜ், நாகராஜ், குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT