கோயம்புத்தூர்

வால்பாறை 51 பகுதியில் உயா் மின்கோபுர விளக்கு

DIN

வால்பாறை: வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதி 51 இடங்களில் உயா் மின்கோபுர விளக்கு நகராட்சி மூலம் அமைக்கப்பட உள்ளது.

வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இதில் யானைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகரித்து காணப்படும். போதுமான தெருவிளக்குகள் இல்லாததாலும், பழுதைடந்த தெருவிளக்குகளை சரிசெய்யாமல் இருப்பதாலும் இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வருவதை தவிா்த்து வந்தனா்.

இதனிடையே கடந்த புதன்கிழமை வால்பாறையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி நகராட்சி மூலம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ரூ.3 கோடியே 30 லட்சம் செலவில் 51 புதிய சிறிய இலகுரக உயா் மின்கோபுர விளக்கு அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினாா். இதனால் மகிழ்ச்சி தெரிவித்துள்ள எஸ்டேட் பொதுமக்கள் இப்பணிகளை விரைவில் துவங்க இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT