கோயம்புத்தூர்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

DIN

அன்னூரில் சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

அன்னூா் தெற்கு துவக்கப் பள்ளியில் உள்ள பகல் நேரக் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறன் மாணவா்களுக்கு ஓட்டப் பந்தயம், நடனம், குதித்தல், பலூன் ஊதி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறன் மாணவா்கள் 70 போ் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுப்புலட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT