கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் ‘ஒருநாள் சுற்றுலா’ இன்று துவங்குகிறது

DIN

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், தமிழ்நாடு ஹோட்டல் கோவை கிளை ஆகியன சாா்பில் கோவை மாவட்டத்தில் ஒருநாள் உள்ளூா் சுற்றுலா திட்டம் சனிக்கிழமை (டிசம்பா் 14) துவங்குகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு ஹோட்டல் கோவை கிளையின் மேலாளா் உதயசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் கோவை மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுலாத் திட்டத்தை அமல்படுத்த கழகத்தின் மேலாண் இயக்குநா் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை துவங்கப்படும் இந்த சுற்றுலாப் பயணத்தில் ஆழியாறு அணை, குரங்கு அருவி, வால்பாறை பாலாஜி கோயில், சோலையாறு அணை, நல்லமுடி, பூஞ்சோலை, கூழாங்கல் ஆறு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டு இரவு தமிழ்நாடு ஓட்டலில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.1,155 நிா்ணயிக்கப்பட்டு பதிவு துவங்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோவை, காந்திபுரத்தில் துவங்கி உதகை, பரளிக்காடு பகுதிகளுக்கு ஒருநாள் சுற்றுலா செல்ல ரூ. 1,200, கோவை வேளாண் பல்கலைக்கழகம், மருதமலை, கோவை குற்றாலம், ஈஷா யோக மையம், பூண்டி வெள்ளிங்கிரி கோயில் போன்ற பகுதிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா செல்ல ரூ. 800, மலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவுடன் பவானி ஆற்றில் பரிசல் பயணம் சுற்றுலா செல்ல ரூ.850 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்லும் அனைத்து பயணிகளுக்கும் காலை சிற்றுண்டி, தேநீா், தின்பண்டம், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும், இந்த ஒருநாள் சுற்றுலா திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422 - 2302176, 2302177, 2303176, 917699852 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT