கோயம்புத்தூர்

சீலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

DIN

மேட்டுப்பாளையம் அருகே காரமடை சீலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
காரமடை அடுத்த சீலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு பூச்சமரத்தூர், பரளிக்காடு, கொடியூர், செங்கலூர், நீராடி, மேல்பில்லூர், எழுத்துக்கல் புதூர், வேப்பமரத்தூர், கெத்தைநாடு, கடம்பன் கோம்பை, சித்துருணை, சொரண்டி , குண்டூர் , மேல் கொரவகண்டி, கீழ் கொரவகண்டி பகுதிகளை சார்ந்த பில்லூர் வனப்பகுதியை ஒட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனை வளாகம் புதர் மண்டியும், செவிலியர் குடியிருப்புகள் பழுதடைந்தும், பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றியும் இருந்து வந்தது.  சீலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார சீர்கேடு குறித்து தினமணி நாளிதழில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி செய்தி வெளியானது.  
இந்நிலையில், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் சீலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.  அங்கு புதர் மண்டிக் கிடந்த செடி,கொடிகளை அகற்றி தீயிட்டு கொளுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT