முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த மக்கள்

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 2:27 am IST
பகிர்:

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
கோவை, சௌரிபாளையம் பிரிவு நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கீதா (52). இவர் வீட்டின் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கீதாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட கீதா நகையை மீட்கப் போராடினார். இதில் அந்த இளைஞர் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் கீழே விழுந்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்ற அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து ராமநாதபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரசூல் (19) என்பதும், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.