கோயம்புத்தூர்

செல்லிடப்பேசியை பறித்த இளைஞர் கைது

DIN

அன்னூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தவரிடம் இருந்து செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
திருநெல்வேலி மாவட்டம்,  ஆண்டிநாடாரூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் அந்தோணி யாகப்பன்(21). இவர் அன்னூர் பேருந்து நிலையத்தில் தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை மதியம் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரிடமிருந்த செல்லிடப்பேசியை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது, அந்தோணி யாகப்பன் சப்தமிட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் தப்பி ஓடிய இளைஞரை துரத்திச் சென்று பிடித்து அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சரவணம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (25) என்பது என்பது தெரியவந்தது. இதுகுறித்து அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT