கோயம்புத்தூர்

சூலூரில் வருவாய் தீர்ப்பாயம்:  61 மனுக்களுக்கு தீர்வு

DIN

சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்ப்பாயத்தில் 61 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்ப்பாய நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமை வகித்தார். கோவை தெற்கு கோட்டாட்சியர் தனலிங்கம் முன்னிலை வகித்தார். 
 இதில், வாரப்பட்டி பிர்காவை சேர்ந்தவர்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர். இதில் 207 மனுக்கள் முதியோர் உதவித் தொகை கோரியும், 217 பொதுவான மனுக்களும் பெறப்பட்டன. கடந்த 4  நாள்கள் நடைபெற்ற வருவாய் தீர்ப்பாயத்தில் முதியோர் உதவித் தொகை கோரி பெறப்பட்ட 44 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 9 பட்டா மாறுதல், 8 உட்பிரிவு பிரித்தல் உள்ளிட்ட மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டன. இதனை சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கந்தசாமி, பயனாளிகளுக்கு வழங்கினார். சூலூர் பொறுப்பு வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT