கோயம்புத்தூர்

வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தின் செயல்பாடு  குறித்து விழிப்புணர்வு 

மக்களவைத் தேர்தலையொட்டி யாருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி யாருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வி.வி.பேட்  இயந்திரத்தின்  செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. 
 வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வி.வி.பேட்  இயந்திரத்தின் மூலம் வாக்களித்த 7 விநாடிகளில் யாருக்கு, எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
 அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வி.வி.பேட் இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு  காலை 10 முதல் மாலை 5 மணி வரை இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அரசு அலுவலர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT