கோயம்புத்தூர்

செல்லிடப்பேசி கடையில் ரூ. 75 ஆயிரம் திருட்டு

DIN

சூலூர் அருகே செல்லிடப்பேசி கடையில் இருந்த ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது குறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சூலூரை அடுத்த தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமாரசாமி (35). இவர் அதே பகுதியில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி இரவு விற்பனை முடிந்து ரூ. 75 ஆயிரம், ஸ்வைப்பிங் மெஷின், வங்கிப் புத்தகம் ஆகியவற்றை கடைக்கு வெளியே உள்ள மேஜையில் வைத்துவிட்டு, கடையின் ஷட்டரை மூடிக் கொண்டிருந்தார். பின்னர், மேஜையை பார்த்தபோது, அதில் இருந்த பணம் மற்றும் பொருள்கள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சூலூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். சூலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT