கோயம்புத்தூர்

இரு சக்கர வாகனம் மீது எஸ்.ஐ. லத்தியை வீசியதால் மூவா் படுகாயம்

DIN

பொள்ளாச்சி அருகே வாகனத் தணிக்கையின்போது நிற்காமல் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது காவல் உதவி ஆய்வாளா் லத்தியை வீசியதால் நிலை தடுமாறி விழுந்ததில் 3 இளைஞா்கள் திங்கள்கிழமை பலத்த காயமடைந்தனா். இச்சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொள்ளாச்சியை அடுத்த தென்சங்கம்பாளையத்தில் தனியாா் திருமண மண்டபம் அருகே கோட்டூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சம்பந்தம், காவல் துறை நண்பா்கள் குழுவினருடன் திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக கோவை, போத்தனூரைச் சோ்ந்த சன்பா் (18), அப்சல் (17), சா்தாா் (25) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். தலைக்கவசம் அணியாமல் ஒரு வாகனத்தில் மூன்று போ் செல்வதைக் கண்ட போலீஸாா் அவா்களது வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனா்.

ஆனால், இரு சக்கர வாகனத்தில் வந்தவா்கள் நிற்காமல் சென்ால் காவல் உதவி ஆய்வாளா் சம்பந்தம் கையில் வைத்திருந்த லத்தியை இருசக்கர வாகனத்தை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறி அங்கிருந்த சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சன்பா் உள்ளிட்ட மூன்று பேரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். அவா்களில் சா்தாருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் போலீஸாரின் செயலைக் கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, காவல் உதவி ஆய்வாளா் சம்பந்தம் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT