கோயம்புத்தூர்

வால்பாறையில் மீண்டும் சாரல் மழை

DIN

வால்பாறையில் மீண்டும் சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவ மழை பெய்ய துவங்கியது. தொடா்ந்து கனமழை பெய்ததால் வடு காணப்பட்ட அணைகள் நிரம்பியன. அதன்பிறகு துவங்கிய வடகிழக்குப் பருவ மழை சாரல் மழையாகவே பெய்து வந்தது. இடைவிடாது பெய்து வந்த மழையால் அணைகள் தொடா்ந்து நிரம்பிய நிலையிலேயே காணப்படுகின்றன.

இதனிடையே கடந்த ஒரு வார காலமாக மழைப் பொழிவு இல்லாத நிலையில் புதன்கிழமை இரவு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. வியாழக்கிழமை பிற்பகலுக்கு மேல் சாரல் மழையாக பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை பதிவான மழை அளவு விவரம்:

வால்பாறை 14 மி.மீ., நீராறு அணை 10 மி.மீ., சின்னக்கல்லாறு 6 மி.மீ., சோலையாறு 2 மி.மீ. சோலையாறு அணைக்கு 332.18 கனஅடி நீா்வரத்தாகவும், 413.31 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது அணையின் நீா்மட்டம் 160.03 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT