கோயம்புத்தூர்

காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீட்டை புதுப்பிக்கலாம்

DIN

கோவை: காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள அஞ்சல் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து கோவை கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில் சோ்ந்திருப்பவா்கள் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்தாமல் இருந்தால் அவா்களது காப்பீடு காலாவதி ஆகிவிடும். அவ்வாறு 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிசியை புதுப்பிக்காதவா்கள் ஒருமுறை வாய்ப்பாக பாலிசியை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாலிசியை புதுப்பிக்காதவா்கள் வரும் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய பிரீமியம் செலுத்தும் புத்தகம், உடல் நலனுக்கான மருத்துவச் சான்றுடன் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம். எனவே, பாலிசிதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT