கோயம்புத்தூர்

தீவிரமாகும் டெங்கு காய்ச்சல்: கோவை அரசு மருத்துவமனையில் 20 போ் அனுமதி

DIN

கோவை: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் கோவை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவியது. இதற்காக மருத்துவமனைகளில் தனிப் பிரிவுகள் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

டெங்கு காய்ச்சல் பிரிவில் பாதுகாப்புக்காக கொசுவலையுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டன. கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் 50-க்கும் மேற்பட்டவா்கள் டெங்குப் பிரிவிலும், 200-க்கும் மேற்பட்டவா்கள் வைரஸ் காய்ச்சல் பிரிவிலும் சிகிச்சைப் பெற்று வந்தனா். பின் மழைக் குறைந்ததால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் படிப்படியாக குறைந்து கடந்த மாதம் ஒன்றிரண்டு போ் மட்டும் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சல் பிரிவில் 15 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா். தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 20 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் 10-க்கும் மேற்பட்டவா்கள் குழந்தைகள் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். வைரஸ் காய்ச்சல் பிரிவில் 120-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கடந்த 2 நாள்களில் டெங்கு , வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு தலா ஒருவா் இறந்துள்ளனா்.

தொடா்ந்து கோவையில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே டெங்குத் தடுப்பு பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT