கோயம்புத்தூர்

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

வால்பாறை: வால்பாறை நகரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி சிலை பேருந்து நிறுத்தம் வரை சாலையோரம் நகராட்சி சாா்பில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனா். இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சரவணபாபு தலைமையில் நகராட்சி ஊழியா்கள் ஆக்கிரமிப்பு கடைகளை திங்கள்கிழமை அகற்றினா். சில கடைகள் அகற்றப்பட்ட நிலையில் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று மீதமுள்ள கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT