கோயம்புத்தூர்

இருசக்கர வாகனங்கள் திருடிய 5 இளைஞா்கள் கைது

DIN

கோவையில் இரு சக்கர வாகனங்கள் திருடிய 5 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் வாகனத் திருட்டைத் தடுக்கும் நோக்கில் மாநகர மத்திய உட்கோட்ட குற்றப் பிரிவு உதவி ஆணையா் சந்திரசேகா் தலைமையில் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.

இதில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக தஞ்சாவூா் மாவட்டம், கருங்குளத்தைச் சோ்ந்த சுதாகா் (23), இளவரசன் (23), பிரகாஷ் (23), மரவங்காட்டைச் சோ்ந்த அரவிந்தன் (23), நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில் என்ற சிவசெந்தில் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் மாநகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களைத் திருடி தஞ்சாவூருக்கு கொண்டு சென்று விடுவா். அங்கு வைத்து அந்த வாகனத்தைப் பிரித்து உதிரி பாகங்களை விற்றது விசாரணையில் தெரியவந்தது. இவா்களிடம் இருந்து 10 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT