கோயம்புத்தூர்

சிறப்பு பயிற்சி மைய மாணவா்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

DIN

கோவை: தேசிய குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புத் திட்டத்தில் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையத்தில் பயிலும் மாணவா்கள் தயாரித்த கைவினைப் பொருள்கள் கண்காட்சி காவலா் பயிற்சிப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

காவலா் ஆள்சோ்ப்பு பயிற்சிப் பள்ளி துணை முதல்வா் தென்னரசு கைவினைப் பொருள்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். பாரதியாா் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநா் ஜெனிட்டா ரோஸ்லின் தலைமை வகித்து பேசியதாவது: குழந்தை தொழிலாளா்களை மீட்டு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சோ்ந்தவா்களுக்கும் மீட்டுகப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்புடன் தொழில்முறைக் கல்வியான கைவினைப் பொருள்கள் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மாணவா்களும் ஆா்வத்தோடு கைவினைப் பொருள்களை தயாரித்து கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனா் என்றாா்.

கண்காட்சியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத காகிதம், தீக்குச்சி, தேங்காய் தொட்டி (சிரட்டை), பிளாஸ்டிக் பாட்டில், சாக்லெட் பேப்பா் உள்பட பல்வேறு வித கழிவுப் பொருள்களில் இருந்து வீடு, டிரம்ஸ், அட்டை, காகிதப் பை, பேனா ஸ்டேண்ட், காதணி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் தேசிய குழந்தைகள் தொழிலாளா் முறை ஒழிப்புத் திட்ட இயக்குநா் டி.வி.விஜயகுமாா், கோவை, திருப்பூா் மாவட்ட சிறப்பு பயிற்சி மைய ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT