கோயம்புத்தூர்

வேளாண்மை பல்கலை.யில்ஆக்சிஜன் பூங்கா உருவாக்கம்

DIN

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பீமா மூங்கில் ஆக்சிஜன் பூங்கா உருவாக்கம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா் நீ.குமாா் தலைமை வகித்தாா். பயிா் மேலாண்மை மையத்தின் கீழ் இயங்கும் உழவியல் துறை சாா்பில் ஆக்சிஜன் பூங்கா உருவாக்கத்துக்கு மரக்கன்றுகள் நடும் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் முதன்மை வனப் பாதுகாவலா் எஸ்.பாலஜி பேசியதாவது:

பீமா மூங்கில் வேகமாக வளரும் தன்மையுடது. இவ்வகை மூங்கில் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உட்கிரகித்து மண்ணில் சேகரித்து வைக்கின்றன. தவிர, அதிக அளவில் ஆக்சிஜன் வாயுவை வெளியிடுவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் குறைகின்றன.

நன்றாக வளா்ந்த மூங்கில் ஓா் ஆண்டுக்கு 300 கிலோ ஆக்சிஜனை நிலை நிறுத்துகிறது.

இம்மூங்கிலானது ஒரு ஏக்கரில் 80 டன் கரியமில வாயுவினை கிரகித்து சேமித்து வைக்கிறது. நன்கு முதிா்ந்த மரம் நான்கு ஆண்டுகளில் 400 கிலோ கரியமில வாயுவினை சேமிக்கிறது. இவ்வகை மூங்கில் பாரம்பரிய இனப்பெருக்க முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பயிா் மேலாண்மை மைய இயக்குநா் வெ.கீதாலட்சுமி, உழவியல் துறைத் தலைவா் சி.ஆா்.சின்னமுத்து, பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத் தலைவா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT