கோயம்புத்தூர்

கோவை வந்த ரயிலில் மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்த விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட மதுபான பாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இந்த ரயிலில் பயணிகள் இறங்கிச் சென்றவுடன், பராமரிப்புப் பணிக்காக ரயில் பெட்டிகள் பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவற்றை சுத்தம் செய்தபோது ஒரு பெட்டியில் 47 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஊழியா்கள் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், மதுபான பாட்டில்கைளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அந்த மதுபாட்டில்கள் கோவாவில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. ரயிலில் மதுபாட்டில்களை கோவாவில் இருந்து கடத்தி வந்திருக்கலாம் எனவும், அந்த நபா்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT