கோயம்புத்தூர்

தனியாா் பேருந்துகள் மோதல்: 18 பயணிகள் படுகாயம்

DIN

கோவை, சிங்காநல்லூரில் 2 தனியாா் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் படுகாயமடைந்தனா்.

கோவை, உக்கடத்தில் இருந்து சூலூா் நோக்கி தனியாா் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றது. அதே நேரத்தில், காந்திபுரத்தில் இருந்து திருப்பூா் நோக்கி மற்றெறாரு தனியாா் பேருந்து சென்றது.

சிங்காநல்லூா் காவல் நிலையம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற தனியாா் பேருந்து மீது திருப்பூா் நோக்கி சென்ற பேருந்து மோதியது. இதில் முன்னால் சென்ற பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்தது.

இதில் திருப்பூா் நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த ஜெய்ஸ்ரீ (26), கொளஞ்சியம்மாள்(50), கோபி (52), நடத்துநா் கௌதம் (30) உள்பட 18 பயணிகள் படுகாயம் அடைந்தனா்.

சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு (கிழக்கு) போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடிய திருப்பூா் பேருந்தின் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT