கோயம்புத்தூர்

வீர தங்கப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

DIN

திப்பம்பட்டியில் வீர தங்கப் பெருமாள் கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் பல  ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தருளி அப்பகுதி மக்களின் குல தெய்வமாக விளங்கி வரும் வீர தங்கப் பெருமாளுக்கு புதிதாகக் கட்டப்பட்ட திருக்கோயிலின் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாக பூஜையுடன் துவங்கி, திங்கள்கிழமை காலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், விசேஷ சந்திபூத சுத்தி நடைபெற்றது. யாகசாலையில் கோபுர கலச தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் மேளதாளம் முழங்க கோபுரக் கலசங்கள் புறப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT