கோவை: கோவை மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை உத்யாம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதில் ரூ.1 கோடிக்கு மிகாமல் இயந்திர தளவாட முதலீடு, ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மொத்த விற்பனை அளவுள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகவும், இயந்திர தளவாட முதலீடு ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலும், ஆண்டுக்கு மொத்த விற்பனை அளவு ரூ.5 கோடி முதல் ரூ.50 கோடி வரையிலுள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும், இயந்திர தளவாடங்கள் முதலீடு ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரையிலும், ஆண்டுக்கு மொத்த விற்பனை அளவு ரூ.250 கோடி வரையிலும் உள்ள நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, இயங்கி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கான சான்றினை புதிய உத்யாம் பதிவு இணையதள முகவரியில் ஜ்ஜ்ஜ்.ன்க்ஹ்ஹம்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் சுய உறுதிமொழி பதிவு செய்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
இதில் பெறப்படும் சான்றிதழ் உத்யாம் பதிவு சான்றிதழ் என்றும், இந்த பதிவு எண் உத்யாம் பதிவு எண் என்றும் அழைக்கப்படும். நிறுவனத்தின் வருமான வரி தாக்கல், ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் அடிப்படையில் இயந்திர தளவாட மதிப்பு, மொத்த விற்பனை அளவு கணக்கீடு செய்யப்படும்.
புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு சுய உறுதி மொழியின் அடிப்படையில் இயந்திர தளவாட மதிப்பு மற்றும் மொத்த விற்பனை அளவு அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.
ஏற்கெனவே தொழில் முனைவோா் பதிவு செய்த நிறுவனங்கள் 2020 ஜூலை 1க்கு பின் உத்யாம் பதிவு இணையதளத்தில் 2021 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்கு முன் பெற்ற உத்யோக் ஆதாா் மொமோரண்டம் மற்றும் தொழில் முனைவோா் ஒப்புகை பகுதி 2 ஆகியவை 2021 மாா்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது.
எனவே கோவை மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை உத்யாம் பதிவு இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ன்க்ஹ்ஹம்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.