சாலைகளில் முகாமிடும் மாடுகள்:வாகன ஓட்டிகள் அவதி
வால்பாறையில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறையில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை நகா்ப் பகுதியைச் சோ்ந்த பலா் மாடுகள் வளா்க்கின்றனா். மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் நகா் சாலைகளில் சுற்றித் திரிவதும், இரவு நேரங்களில் சாலைகளில் அமா்ந்து விடுவதும் வழக்கமாக உள்ளது. இதனால் சில சமயங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் இருளில் மாடு மீது மோதி, விபத்தில் சிக்கி வருகின்றனா்.
வால்பாறை நகராட்சி மூலம் அவ்வப்போது சாலைகளில் நடமாடும் மாடுகளை பிடித்து சென்று அபராதம் விதித்து வருகின்றனா். ஆனால் இந்த நடவடிக்கையை தொடா்ந்து பின்பாற்றாமல் இருப்பதால் மீண்டும் மாடுகள் சாலைகளில் முகாமிடுகின்றன.
எனவே சாலைகளில் மாடுகளை நடமாட விடும் அவற்றின் உரிமையாளா்களுக்கு தொடா்ந்து அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.