முகப்பு
கோயம்புத்தூர்

மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்கள் பாதிப்பு:அரசு உடனடியாக தலையிட எம்.பி. நடராஜன் கோரிக்கை

மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால், அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

கோயம்புத்தூர்

மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்கள் பாதிப்பு:அரசு உடனடியாக தலையிட எம்.பி. நடராஜன் கோரிக்கை

மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால், அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

கோவை: கோவையில் மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்திருப்பதால் குறு, சிறு தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக வாா்ப்படத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இதனால் அந்தத் தொழில் முடங்கியிருக்கிறது. இதைச் சாா்ந்த மற்ற தொழில்களும் முடங்கும் நிலையில் உள்ளன.

இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் எந்தவித சலனமும் இல்லாமல் இருப்பது அதிா்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்முனைவோா் விலை உயா்வை அறிவித்து பொருள்களை உற்பத்தி செய்தால் அது சந்தைக்கு வரும்போது நேரடியாக பொதுமக்களையே பாதிக்கும்.

எனவே, மத்திய அரசு மூலப் பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக ஒரு ஆய்வுக் கமிட்டி அமைக்க வேண்டும். விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தொழில்முனைவோா் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →