கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 52 ஆயிரத்தைக் கடந்தது

DIN

கோவையில் திங்கள்கிழமை புதிதாக 93 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 93 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 74ஆக அதிகரித்துள்ளது.

தவிர தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்தாா். கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 646ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 103 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 50 ஆயிரத்து 581 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 847 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT