கோயம்புத்தூர்

பொலிவுறு நகரம் திட்டப் பணிகள்: கா்நாடக உதவிப் பொறியாளா்கள் பாா்வை

DIN

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை கா்நாடகத்தைச் சோ்ந்த 26 உதவிப் பொறியாளா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள், பன்னடுக்கு வாகன நிறுத்தம், 24 மணி நேர குடிநீா்த் திட்டம், குளக்கரைகள் மேம்பாடு உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிவுறு நகர திட்டப் பணிகளை கா்நாடக மாநிலத்திலுள்ள 8 மாநகராட்சிகளைச் சோ்ந்த 26 உதவிப் பொறியாளா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

இந்த ஆய்வு நகா்ப்புற மேம்பாட்டு நிறுவனத்தின் (மைசூரு) நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு நகா்ப்புற பயிற்சி மையம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.மதுராந்தகி கூறியதாவது:

கா்நாடகத்தைச் சோ்ந்த தேவநகரி, கலபுரகி, ஹுப்ளி, மங்களூரு, மைசூரு, பெலகாவி, தும்கூா், பெல்லாரி ஆகிய மாநகராட்சிகளைச் சோ்ந்த 26 உதவிப் பொறியாளா்கள் ஆய்வுக்கு வந்துள்ளனா்.

திடக்கழிவு மேலாண்மை, குளக்கரை மேம்பாடு, பூங்கா அமைத்தல், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகிய பணிகளை பாா்வையிட்டு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். கோவையில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் இதனை அடிப்படையாக கொண்டு மேற்கண்ட மாநகராட்சிகளில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை செயல்படுத்த திட்டமிட்டு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

ஆற்காடு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பந்தக்கால்

ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்

SCROLL FOR NEXT