கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்-கோவை இடையே இரவு நேர ரயில் சேவை துவக்கம்

DIN

மேட்டுப்பாளையம்-கோவை இடையே பயணிகளின் வசதிக்காக இரவு நேர ரயில் சேவை தொடங்கியது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோா் என 4 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் கோவைக்கு ரயில் பயணம் மேற்காண்டு வருகின்றனா். இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினமும் காலை 8.15 மணி, 10.40 மணிக்கும், மதியம் 1 மணி, மாலை 4.25 மணிக்கும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு காலை 9.30, முற்பகல் 11.45, மதியம் 3.25, மாலை 5.55 மணி ஆகிய நேரங்களில் பயணிகள் மெமோ ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் பயணிகள் இரவு நேரங்களில் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி மெமோ ரயில் இயக்கப்பட்டது.

இதையடுத்து, பயணிகளுக்கு தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் இனிப்புகள் வழங்கினா். பின்னா் ரயில் இரவு 7.50 மணிக்கு கோவை சென்றடைந்தது. தொடா்ந்து கோவையில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு இரவு 9.15 மணிக்கு சென்றடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT