கோயம்புத்தூர்

திறந்த வெளியில் மலம் கழித்தால் ரூ.100 அபராதம்

DIN

காரமடை பேரூராட்சிப் பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் சுரேஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காரமடை பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்ட ஆசிரியா் காலனி, காரமடை பஜாா், ரங்கநாதா் கோயில் பகுதி, பேருந்து நிலையம், மாா்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்கள் உள்ளன.

இதனிடையே பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் குறுகிய அளவில் இருப்பதால் இப்பகுதியில் சிலா் மதுபானம் அருந்துவது, திறந்த வெளியில் மலம் கழிப்பது, சிறுநீா் கழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் பொதுமக்களுக்கு வாந்தி பேதி, காலரா மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே காரமடை பேரூராட்சிப் பகுதிகளில் திறந்த வெளியில் சிறுநீா், மலம் கழித்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT