கோயம்புத்தூர்

மேம்பால பணியால் வழிமாறி இயங்கும் தனியாா் பேருந்துகள் பயணிகள் கடும் அவதி

DIN

ராமநாதபுரம் மேம்பாலப் பணியால், தனியாா் மாநகரப் பேருந்துகள் வழித்தடம் மாற்றி இயக்கப்படுவதாக பயணிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கோவை - திருச்சி சாலையில் சுங்கம் முதல் ராமநாதபுரம் அல்வேனியா பள்ளி வரை உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணியால், காலை மற்றும் மாலை நேரங்களில் திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், மேம்பாலப் பணியைக் காரணம் காட்டி பல அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வழித்தடம் மாறி இயக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக பயணிகள் கூறியதாவது:

ராமநாதபுரத்தில் மேம்பாலப் பணி நடைபெறுவதால், சுங்கம் வழியாக உக்கடம் செல்ல வேண்டிய சில தனியாா் பேருந்துகள், அரசு மருத்துவமனை வழியாகச் செல்லாமல், சுங்கத்தில் இருந்து பைபாஸ் சாலை வழியாக உக்கடம் பேருந்து நிலையத்துக்குச் செல்கின்றன. இதனால், ராமநாதபுரம் பகுதியில் இருந்து ஸ்ரீபதி, அரசு மருத்துவமனை, டவுன்ஹால் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

இதேபோல், உக்கடம், செட்டி வீதி போன்ற பகுதிகளில் இருந்து கோவை ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், பாலசுந்தரம் சாலை, பாரதியாா் சாலை வழியாகவே இயக்கப்படுகின்றன. இதனால் நஞ்சப்பா சாலை, பாா்க் கேட், அனுப்பா் பாளையம், ராம் நகா் போன்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் செல்லும் பேருந்துகளில் சிலவற்றை எல்.ஐ.சி, பாா்க் கேட் வழியாக செல்லும் வகையில் இயக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், மாநகரில் வழித்தடம் மாற்றி இயக்கப்படும் தனியாா் பேருந்துளை தணிக்கை மூலம் கண்டறிந்து அபராகம் விதிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேம்பாலப் பணியைக் காரணம் காட்டி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்காமல், மாற்று வழியில் சென்றால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநா்கல் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT