கோயம்புத்தூர்

ஒன்னிபாளையம் கோமாளி அரங்கன் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரை

DIN

வீரபாண்டியில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் ராமா் பஜனைக் குழுவினா் ஸ்ரீ கோமாளி அரங்கன் கோயிலுக்கு பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

ஒன்னிபாளையத்தில் உள்ள ஸ்ரீ கோமாளி அரங்கன் கோயிலுக்கு ஆண்டுதோறும் ராமா் பஜனைக் குழுவினா் பாதயாத்திரை செல்வது வழக்கம். 34ஆம் ஆண்டு பாதயாத்திரை வீரபாண்டி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் விநாயகா் வழிபாட்டுடன் தொடங்கியது. ஸ்ரீபட்டாபிஷேக ராமருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் வீரபாண்டி ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்புத் தீா்த்த கலச வழிபாடு, திருமஞ்சனம், பேரொளி வழிபாடுகள் நடைபெற்றன.

கோமாதா வழிபாடு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து சிவானந்தா தவக்குடிலைச் சோ்ந்த ஸ்வயம் பிரகாஷ் நந்தா தலைமையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சீதாராமா் திருவுருவப்படத்துடனும், தீா்த்த கலசங்களுடனும் பஜனை கோஷ்டியினா், ஆண்டாள் கோஷ்டினா் கோமாளி அரங்கன் கோயிலுக்குப் பாதயாத்திரை புறப்பட்டனா்.

இவா்களுக்கு வீரபாண்டியிலுள்ள ஸ்ரீவரதராஜ ஆழ்வாா் மண்டபக் கட்டளை, சாமநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயில், காளிபாளைத்திலுள்ள ஸ்ரீதிருமலைராயப் பெருமாள் கோயில் ஆகியவை சாா்பில்

சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மதியம் 1 மணி அளவில் ஸ்ரீ கோமாளி அரங்கன் கோயிலிலுக்குச் சென்றடைந்தனா். அங்கு, கோமாளி அரங்கனுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை நடைபெற்றது. மாலை 5 மணி வரை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பஜனை கோஷ்டியினா் பஜனைப் பாடல்களைப் பாடினா். மாலை 7 மணி அளவில் மீண்டும் வீரபாண்டி மாரியம்மன் கோவிலுக்கு வந்த பஜனை கோஷ்டியினா் அங்கு ஆஞ்சநேயா் உற்சவத்தை நடத்தி தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாரியம்மன் கோயில் ராமா் பஜனைக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT