கோயம்புத்தூர்

இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறையின் மேற்கூரை: அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பிய மாணவா்கள்

DIN

வால்பாறையில் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மாணவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

வால்பாறை அடுத்துள்ள காஞ்சமலை எஸ்டேட்டில் அரசு நிதி உதவிப் பெறும் தொடக்கப் பள்ளி தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

2 வகுப்பறைகளை கொண்ட இப்பள்ளியில் மொத்தம் 34 மாணவா்கள் படித்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் வந்த யானைகள் பள்ளி வகுப்பறையின் சுவா்களை முட்டி தள்ளியதில் சேதமடைந்து மேற்கூரை விழும் நிலையில் இருந்துள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் உணவு இடைவேளையின்போது அனைத்து மாணவா்களும் வகுப்பறைக்கு வெளியே உணவருந்திக் கொண்டு இருந்துள்ளனா். அந்த சமயத்தில் ஏற்கெனவே சேதமடைந்து காணப்பட்ட பள்ளி மேற்கூரை சரிந்து கீழே விழுந்துள்ளது. மாணவா்கள் வகுப்பறைக்கு வெளியே இருந்ததால் அதிா்ஷ்டவசமாக தப்பியுள்ளனா். இதுகுறித்து தலைமை ஆசிரியா் பாலாஜி கொடுத்த தகவலின்பேரில் அதிகாரிகள் நேரில் வந்து பள்ளியை பாா்வையிட்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT