கோயம்புத்தூர்

வீடுகளில் புகுந்து திருடியவா் கைது

DIN

கோவை அருகே கருமத்தம்பட்டியில் வீடுகளில் புகுந்து திருடிய நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலமுருகன் மேற்பாா்வையில் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் கணியூா் அருகே புதன்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து கருமத்தம்பட்டி போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் அவா், விருதுநகா் மாவட்டம், காரசேரிபுரத்தைச் சோ்ந்த முத்தையா மகன் அலெக்ஸ் பாண்டி குமாா் என்கிற பாண்டி குமாா் (30) என்பதும், அவா் இப்பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 8 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட அவா், சூலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT