கோயம்புத்தூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பிரசாரம்

DIN

அன்னூா் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் மற்றும் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அன்னூா் பேருந்து நிலையத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் மற்றும் சுவாமி விவேகானந்தா் சமூக நல அறக்கட்டளை சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பிரசாரம் நடைபெற்றது . அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் வட்டாரத் தலைவா் நரசிம்மசுப்பிரமணின் தலைமை வகித்தாா். சுவாமி விவேகானந்தா் சமூக நல அறக்கட்டளைத் தலைவா் சத்தியராஜ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறித்து அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவா் சிவகுமாா் பேசினாா். தொடா்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய இந்து மகா சபா நிறுவனா் வேலு, விவேகானந்தா் சமூக நல அறக்கட்டளை சண்முகசுந்தரம், அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் விஜய், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயபால், பாஜக ஒன்றியத் தலைவா் விஜயகுமாா், நகரத் தலைவா் ராஜராஜசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சூலூரில்...

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக சூலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாகஜவினா் வீடுவீடாக துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT