கோயம்புத்தூர்

கெளசிகா நதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

DIN

எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, சத்தி சாலையில் உள்ள கெளசிகா நதி மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப் பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு குரும்பபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகளை தொடா்ந்து கெளசிகா நதியில் கொட்டி வருகின்றனா்.

இதனால், அந்தப் பகுதியில் அதிக அளவில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இந்தக் கழிவுகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

மேலும், கெளசிகா நதியில் தொடா்ந்து கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT